விரைவில் நலம் ஏ.ஐ. செயலி மூலம் மருந்து வாங்கலாம்- அமைச்சர் அருண்ராஜ்

மருத்துவர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
Minister Arunraj
Published on: 

முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும் நலம் ஏ.ஐ. செயலியில் மருந்து, மாத்திரைகள் வாங்க முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான உணவு வீதி என்ற திட்டத்தை முதலில் திருச்சியில் தொடங்கி வைக்க செல்கிறேன். தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் உள்ளது.

இதற்கான போதுமான கொசு ஒழிப்பு, கொசு உற்பத்தியாகும் புழுக்கள் ஒழிப்பிற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று கொசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் உள்ளது. மருத்துவர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை நோய்களுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் மற்றும் நோயாளிகள் மருந்து-மாத்திரைகள் வாங்குவதற்கு காலையில் இருந்து மதியம் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது என்று தகவலின் அடிப்படையில் இதனை சரி செய்ய நலம் ஏ.ஐ.என்ற வாட்ஸ் அப் செயலியை வடிவமைத்து இருக்கிறோம்.

அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர் மருந்து மாத்திரை வாங்குபவர்கள் அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்படி செய்யும்போது கூட்ட நெரிசலை மற்றும் நீண்ட நேர காத்திருப்பதை தவிர்க்க முடியும்.

தாம்பரம் அரசு பொது மருத்துவமணையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X