புதிதாக 6 மாவட்டங்களில் நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்!

கோவையில் 60 இடங்களுடன் புதிய கல்லூரி, ஏற்கனவே உள்ளவற்றில் 440 கூடுதல் இடங்கள்.
 Minister Arunraj
Published on
Summary

தமிழகத்தில் 2014-க்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகளே இல்லாத நிலையில், 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க அமைச்சர் அருண்ராஜ் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

முதல்வரின் விதி 110 அறிவிப்பின்படி 7 கல்லூரிகள், 270 கோடி ஒதுக்கீட்டில், 600 புதிய BSc நர்சிங் இடங்களுடன் வருகிறது.

புதிய செவிலியர் கல்லூரிகள்

இது குறித்து அமைச்சர் பேசியதாவது,

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம் மதுரை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே அரசு செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு புதிய செவிலியர் கல்லூரியில் தொடங்கப்படவில்லை.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110 கீழ் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

270 கோடி ஒதுக்கீடு

இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைகளின் படி ஒரு புதிய செவிலியர் கல்லூரி துவங்க போதிய படுக்கை வசதிகள் கொண்ட தேவையான மருத்துவ பிரிவுகள் கொண்ட போதிய புறநோயாளிகள் எண்ணிக்கை வெளிநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சேவை மற்றும் அதற்கு தேவையான கட்டுமானங்கள் அவசியம்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை இணைப்பு மருத்துவமனையாக கொண்டு புதிய செவிலியர் கல்லூரியில் துவங்கப்பட உள்ளன.

திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 100 இடங்கள் விதம் ஆண்டுக்கு மொத்தம் 600 பிஎஸ்சி நர்சிங் பட்டய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த 6 செவிலியர் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து நடத்திட தொடர் மற்றும் தொடரா செலவினமாக ரூ. 270 கோடி முன்மொழியப்பட்டுள்ளது.

440 இடங்கள் கூடுதல்

மேலும் கோயம்புத்தூர், ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசு நிதியில் 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி ஒன்றும் தொடங்க முன்மொழிவுபட்டது.

ஏற்கனவே உள்ள ஆறு பிஎஸ்சி நர்சிங் பணியிடங்கள் கொண்ட மருத்துவ செவிலியர் மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடங்கள், 440 கூடுதல் இடங்கள் உருவாக்கி இருக்கிறோம் எனக் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com