

20-வது ஆசிய விளையாட்டு போட்டியானது ஜப்பானில் உள்ள ஐய்ச்சி- நகோயாவில் ஆசியப் போட்டி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நட்சத்திரங்கள் மனு பாக்கா்-பவன் செஹ்ராவத் ஆகியோா் தேசிய கொடி ஏந்தி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர்.
ஆசியக் கண்டத்தை சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் இந்த ஆசிய போட்டியனது ஆண்டுக்கு ஒருமுறை நடைப்பெறும். மொத்தம் 11,000 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நடந்து வரும் ஆசிய போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் அணி பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
இந்த நிலையில் மகளிர் துப்பாக்கி சுடும் பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவளனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
ஆசிய விளையாட்டுப் போட்டிதுப்பாக்கிச் சுடுதலில் இரண்டாம் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள்.
ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் தனிநபர் பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே இதே போட்டியின் அணி பிரிவில் இரு வீராங்கனைகளுடன் இணைந்து வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் இரண்டாம் பதக்கத்தையும் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது சாதனைப் பயணம் தொடரட்டும்!
என்று தெரிவித்துள்ளார்.