

முதலமைச்சருக்கு தெரியாமல் அரசாணை வெளி வந்திருக்கிறது என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் கூறினார்.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்த 3 கோப்புகள் தன்னிடம் உள்ளதாக முதலமைச்சர் தான் கூறி உள்ளார்.
* நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அவர்கள் தான்.
* மக்களுக்கு விரோதமாக நடந்துகொண்டால் ஆதரவளித்த கட்சியையும் எதிர்ப்போம்.
* அரசுக்கு ஆதரவும் தொடரும், இடித்துரைப்பதும் தொடரும்.
* அனைத்து ஆட்சிக்காலத்திலும் மக்களுக்கு சாதகமான திட்டத்தை ஆதரிப்போம். எதிரான திட்டத்தை எதிர்ப்போம்.
* பட்டினப்பாக்கம் தலைமைச்செயலகம் விவகாரத்தில் முதலமைச்சர் முடிவெடுக்காமல் எப்படி அரசாணை வெளிவந்தது.
* பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசாணை வெளியிட்டது ஏன்?
* பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் முடிவெடுக்கவில்லை என சமாளிப்பதற்காக அமைச்சர் ஆதவ் பேசுவதை ஏற்க முடியாது.
* முதலமைச்சருக்கு தெரியாமல் அரசாணை வெளி வந்திருக்கிறது என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சாம்சங் போராட்டம் உள்ளிட்டவற்றில் திமுக அரசை நாங்கள் திக்குமுக்காட வைத்துள்ளோம்.
* திமுக ஆட்சிக்காலத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை நாங்கள் போராடி தடுத்துள்ளோம்.
* குற்றச்சாட்டுகளை கூறினால் ஏன் அப்போது கூறவில்லை என கேட்டு திசைதிருப்பக்கூடாது.
* தவெக அரசாங்கத்தை மட்டும் எதிர்த்து கம்யூனிஸ்ட் போராட்டம் என்பது பிரச்சனைகளை திசைதிருப்பும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, புதிய தலைமைச் செயலகம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில்,
தலைமைச் செயலகம் இருக்கும் இடம் நம்முடையது அல்ல. இட நெருக்கடி அதிகமிருக்கிறது. கலைஞரும் அம்மாவும் கூட புதிய தலைமைச் செயலகம் கட்ட நினைத்தார்கள். மீனவ மக்கள் பட்டினப்பாக்கத்தில் போராடியிருக்கிறார்கள். பட்டினப்பாக்கத்தில் விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் இன்னமும் அந்த விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. மீனவர்களா தலைமைச் செயலகமா என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் நிற்பார். கம்யூனிஸ்ட்டுகள் நம்மைப் பற்றி பேசுவது வருத்தமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்.