

வீட்டில் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பவர் காணாமல் போன நிலையில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை செம்பியன் பகுதியில் வசித்து வருபவர் கௌதம், இவரது வீட்டு பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் திருடப்பட்டு இருந்தது 2 வைர வளையல்கள் மற்றும் பணம் ரூ.10,800/- ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இது தொடர்பாக செம்பியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பவர் காணாமல் போன நிலையில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள் ஒரு அவர்தான் நகைகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 பவுன் வைரக்கல் பதித்த 2 தங்க வளையல்கள் மற்றும் பணம் ரூ.10,800/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.