வேப்பேரி காவல்நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்

சேகர்பாபு மீதும், கலாநிதி வீராசாமி மீதும் வேப்பேரி போலீசார் கொலை மிரட்டல் மற்றும் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேகர்பாபு
Published on: 
Summary

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜரானார். காவல்நிலையத்தில் ஆஜரானா சேகர்பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில், கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்தனர். அப்போது போலீசாரிடம், சேகர் பாபு, கலாநிதி வீராசாமி ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

வழக்குப்பதிவு

இதையொட்டி சேகர்பாபு மீதும், கலாநிதி வீராசாமி மீதும் வேப்பேரி போலீசார் கொலை மிரட்டல் மற்றும் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, சேகர்பாபுவுக்கு வேப்பேரி போலீசார் சம்மன் அனுப்பினர். அந்த சம்மன் அடிப்படையில், சேகர்பாபு இன்று (வெள்ளிக்கிழமை) வேப்பேரி போலீஸ் நிலையத்தில் விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜரானார். காவல்நிலையத்தில் ஆஜரானா சேகர்பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

X