தலைவரே இப்படி பேசினால் தொண்டர்கள் என்ன செய்வார்கள்? உருவகேலி செய்த மு.க.ஸ்டாலினுக்கு சத்யபாமா பதில்

திமுகவினருக்கு மேடை நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாது.
Sathyabama
Published on: 
Summary

வழிகாட்டியாக இருக்க வேண்டிய உயர்மட்டத் தலைவரே பொதுவெளியில் மாற்றுக்கட்சி பெண் வேட்பாளரை உருவகேலி செய்து பேசினால், அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் எந்த மாதிரியான பாதையில் பயணிப்பார்கள்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை 'உருவகேலி' செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் பெரும் அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கும் நபரிடமிருந்து இத்தகைய பேச்சுக்கள் வெளிப்படுவது அழகல்ல என்று தெரிவித்தார். ஸ்டாலினின் வீட்டில் தாய், மனைவி, மகள் மற்றும் மருமகள் என அனைவருமே பெண்கள் தான் என்பதை நினைவுகூர்ந்த அவர், இதுபோன்ற உருவகேலி விமர்சனங்களால் அந்தப் பெண்களின் மனநிலை மற்றும் ஒட்டுமொத்த பெண்களின் உணர்வுகள் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைத் தலைவர்கள் யோசித்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தனது ஆதங்கத்தைப் பதிவு செய்த சத்யபாமா, வழிகாட்டியாக இருக்க வேண்டிய உயர்மட்டத் தலைவரே பொதுவெளியில் மாற்றுக்கட்சி பெண் வேட்பாளரை உருவகேலி செய்து பேசினால், அவரைப் பின்பற்றும் தொண்டர்கள் எந்த மாதிரியான பாதையில் பயணிப்பார்கள், தலைவன் எவ்வழியோ தொண்டனும் அந்த வழி என்றார். அரசியல் மேடைகளில் கொள்கை ரீதியான விமர்சனங்களைத் விடுத்து, தனிமனிதத் தாக்குதல்களிலும் உருவகேலியிலும் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. திமுகவினருக்கு மேடை நாகரிகம் என்பது என்னவென்றே தெரியாது என்றார்.

தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக மற்றும் தவெக தலைவர்களுக்கு இடையே தொடர்ச்சியாக நடைபெறும் காரசாரமான வார்த்தை போர்கள் தொகுதி மக்களிடையே பெரும் கவனத்தை பெற்று வருகின்றன. பெண் வேட்பாளர் சத்யபாமாவின் இந்த அறிக்கை மற்றும் ஆதங்கப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் களம் முழுவதிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com