

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியானது.
இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடியும், அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.13 கோடி.
உதயநிதி சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடி என்றும் பூர்வீக சொத்து ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதியின் கையிருப்பில் ரூ.50,000 அவரது மனைவி கிருத்திகாவிடம் ரூ.75,000 இருப்பதாக வேட்பு மனுவில் தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதியிடம் ரூ.1 கோடி மதிப்பிலான டிஃபென்டர் கார், இன்னோவோ கார் ஆகியவை உள்ளதாக வேட்புமனுவில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் ரூ.14.56 லட்சம், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.8.44 லட்சமும் உதயநிதி பெயரில் வைப்புத்தொகை உள்ளது.
உதயநிதியிம் தங்கம், வைர நகைள் ஏதுமில்லை என்றும் அவரது மனைவியிடம் 1600 கிராம் தங்கம் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்பட்டுள்ளது.
சினிமா, வைப்பீடு தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி, எம்எல்ஏவுக்கான ஊதியம் ஆகியவை உதயநிதியின் வருவாய் ஆதாரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.