

மீனவர் ஒருவர் கடலில் வீசிய தூண்டிலில் சுமார் 7 கிலோ பாறைமீன் ஒன்று சிக்கியது. இதை ஒலிபெருக்கி மூலமாக ஊரில் தெரியப்படுத்தி ஏலம் விடப்பட்டது.
வங்ககடலில் உருவாகி உள்ள “அக்வான்” புயல் எச்சரிக்கை காரணமாக மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே, பக்கிங்காம் கால்வாயில் வலைவீசியும், கடலோரத்தில் தூண்டில் வீசியும் சிலர் மீன்பிடித்து வருகின்றனர்.
இதனால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல், ரிசார்ட்களுக்கு மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் கொக்கிமேடு பகுதியில் மீனவர் ஒருவர் கடலில் வீசிய தூண்டிலில் சுமார் 7 கிலோ பாறைமீன் ஒன்று சிக்கியது. இதை ஒலிபெருக்கி மூலமாக ஊரில் தெரியப்படுத்தி ஏலம் விடப்பட்டது. இந்த ஒரு பாறைமீன் மட்டும் ரூ.500-க்கு விலை போனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.