73-வது பிறந்தநாள்: ரஜினி வீடு முன்பு திரண்ட ரசிகர்கள் நள்ளிரவில் "கேக்" வெட்டி கொண்டாட்டம்

ரஜினி வீட்டில் இல்லை என அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் ரஜினியை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டிங்காக இருந்து வருகிறது.
73-வது பிறந்தநாள்: ரஜினி வீடு முன்பு திரண்ட ரசிகர்கள் நள்ளிரவில் "கேக்" வெட்டி கொண்டாட்டம்
Published on

சென்னை:

ரஜினி பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பூங்கொத்து, கேக் மற்றும் ரஜினி உருவ போஸ்டருடன் அவர்கள் காத்து நின்றனர்.

ரஜினி வீட்டில் இல்லை என அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் ரஜினியை பார்த்து விட்டு தான் செல்வோம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். இதனிடையே ரஜினி நடித்து வரும் 170-வது படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியிடப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையொட்டி ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்து உள்ளனர். வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் எக்ஸ் தளங்களில் தலைவர் 170, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற 'ஹேஷ்டேக்' டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

ரஜினி பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகளை ரசிர்கள் நள்ளிரவு முதல் வழங்கியதுடன் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com