வெப்பத்தை தணித்து சென்னையை குளிர்வித்த மழை..!

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான நிலை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
chennai rain
Published on: 

தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அக்.15 முதல் தென்னிந்திய தீபகற்பப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல். மழை தீவிரமடையக்கூடும் என்பதால் பொதுமக்கள், மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே வெப்பம் தகித்து வந்த நிலையில், தற்போது பட்டினப்பாக்கம், அடையாறு, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், சேப்பாக்கம், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்வதால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான நிலை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த ஒரு வார காலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழியக்கூடுமென்றும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com