

கூட்டணியில் இருந்து விலகிய மற்ற கட்சிகளாவது தங்கள் முடிவைச் சொல்லிவிட்டுச் சென்றன. ஆனால், எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் கூட்டணியை விட்டு ஒரே இரவில் அந்தர் பல்டி அடித்துச் சென்ற எட்டப்பர்கள் நாங்களா அல்லது நீங்களா என்று ரகுபதி காட்டமாகத் தெரிவித்தார்.
கூட்டணியை விட்டு ஒரே இரவில் முடிவெடுத்து விலகிய எட்டப்பர்கள் நாங்களா, நீங்களா என காங்கிரஸ் கட்சியை நோக்கி முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் கூட்டணி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார். மற்றவர்களைப் பார்த்து 'எட்டப்பன்' என்று விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டணியில் இருந்து விலகிய மற்ற கட்சிகளாவது தங்கள் முடிவைச் சொல்லிவிட்டுச் சென்றன. ஆனால், எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் கூட்டணியை விட்டு ஒரே இரவில் அந்தர் பல்டி அடித்துச் சென்ற எட்டப்பர்கள் நாங்களா அல்லது நீங்களா என்று ரகுபதி காட்டமாகத் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தைப் பொறுத்தவரை தாங்கள் எப்போதும் நியாயமான நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாக ரகுபதி தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் உரிமை மற்றும் நலனுக்கு எதிரான எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லை என்ற அடிப்படையிலேயே தங்களது செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.