

காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நேற்று கோரிக்கை மனு கிடைத்ததும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தமிழ்நாடு சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சூலூர் மையப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு முன்வருமா? என்று சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் எழுப்பிய கேள்விக்கு, மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி கொள்கை ரீதியில் ஒப்புதல் பெறப்பட்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நேற்று கோரிக்கை மனு கிடைத்ததும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாநிலம் முழுவதும் 42 இடங்களில் ரெயில்வே பாலம் கட்ட எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து பரிசிலீக்கப்படும். தேவையான இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள், ஆற்று பாலங்கள் ரிங் சாலை போன்றவை இந்த ஆண்டுக்குள்ளேயே கட்டப்படும் என்று மேம்பாலங்கள் குறித்து பெரும்பாலான உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
வேதாரண்யத்தில் வேதா ஜவுளி பூங்கா முழுமை பெறுமா? மாநில அரசின் நிதியில் வேதா ஜவுளி பூங்கா முடிக்கப்படுமா? என்று அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் எழுப்பிய கேள்விக்கு,
வேதாரண்யத்திற்காகவும் வேதா ஜவுளி பூங்கா, வேதா நிலையத்தை நினைவில் வைத்தும் வேதா ஜவுளி பூங்கா என்று வைத்தீர்கள். இதில் 40 சதவீதம் மத்திய அரசு பங்கு, 9 சதவீதம் மாநில அரசு பங்கு. தொழில் முதலீட்டாளர்கள் முழு மானியம் போட்டு தொழில் தொடங்க முடியாது என்று தெரிவித்தனர். உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். நீங்களும் கூட்டணியில் உள்ளீர்கள். நீங்களும் முயற்சி செய்தால் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.