காலாண்டு விடுமுறை போதுமானதாக இல்லை: கலெக்டரிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்திப்பதற்காக காத்து நின்றனர்.
காலாண்டு  விடுமுறை போதுமானதாக இல்லை: கலெக்டரிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்
Published on: 

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் காலாண்டு விடுமுறை போதுமானதாக இல்லை என மாணவர்கள் கூறி கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சிரிக்க வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கலெக்டருடன் சந்திப்பு

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் நெல் கொள்முதல் மையத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டு இருந்த கோட்டூர் அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்திப்பதற்காக காத்து நின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் காருக்கு சென்ற கலெக்டர், மாணவர்கள் காத்து நிற்பதை பார்த்து அங்கு வந்தார். பின்னர் என்ன விஷயம்? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள், எங்களுக்கு கிரிக்கெட், கைப்பந்து விளையாட விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என கேட்டனர்.

மாணவர்களின் கோரிக்கை

மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர், பள்ளிக்கு ஒழுங்காக சென்று நன்றாக படிக்க வேண்டும். இப்போது உங்களுக்கு காலாண்டு விடுமுறைதானே? என்று கேட்டார்.

சிரிப்பலை

இதற்கு அந்த மாணவர்கள், ஆமா சார். காலாண்டு லீவு பத்த மாட்டேங்குது சார் என்று வெகுளித்தனமாக பதிலளித்தனர். இதனை கேட்டு அங்கு நின்றிருந்த கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை உயர்அதிகாரிகளும் வாய்விட்டு சிரித்தனர். பின்னர் கலெக்டர் பவன்குமார் 2 வாரங்களுக்கு பிறகு இங்கு வருவேன். அப்போது உங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி அளித்தார். இதனை கேட்டு மாணவர்கள் உற்சாகமாக தலையசைத்தனர். அதன்பிறகு கலெக்டர் பவன்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தற்போது கலெக்டர் மற்றும் மாணவர்கள் உரையாடும் வீடியோ கோவை மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com