அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தகுதி என்பது இல்லை..!- அமைச்சர் செங்கோட்டையன்

திரைப்படத் தயாரிப்பாளரும் இந்தியக் குடிமகன் தானே.
Minister Sengottaiyan
Published on

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் மத்தியப்பிரதேசத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழகத்தை சேர்ந்தவரை ஏன் நியமிக்கிறீர்கள் என ம.பியில் யாரும் கேள்வி எழுப்பவில்லை.

நாம் எடுத்துக்கொள்ளும் மனநிலையை பொறுத்துதான். திரைப்படத் தயாரிப்பாளரும் இந்தியக் குடிமகன் தானே.

அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தகுதி என்பது கிடையாது. சமூகப்பணி செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் யாரும் முன் வருவதில்லை அவ்வளவுதான்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com