

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மனு அளித்துள்ளார்.
மனு அளிக்கும்போது சட்டமன்ற உறுப்பினர் வசந்தவேல், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை கோரி நீதிமன்றத்தையும், மகளிர் ஆணையத்தையும் திமுக அணுகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.