இது குறித்து அதிமுக தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,தமிழ் நாட்டில் நிலவி வரும் அவ்வப்போதைய அரசியல் சூழல்கள் குறித்து. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகளை, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செய்தித் தொடர்பாளராக பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் M.Sc., M.Phil., B.Ed., கழக செய்தித் தொடர்பாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களில் எடுத்துரைப்பதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் G. விக்னேஷ்வர், B.E., அவர்கள் வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக இன்று முதல் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.
கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து, தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடக நிகழ்ச்சிகளில் திரு. G. விக்னேஷ்வர் அவர்களும் பங்கேற்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.