

நவீன சைக்கிள் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.115 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளிதாரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரிகள் உட்பட மாணவர்களுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூ.7,235, மாணவிகளுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூ.7,476, மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள விலையில் சைக்கிள்களை கொள்முதல் செய்தால், மொத்த செலவு ரூ.392 கோடியாக இருக்கும். இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.115 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பணி ஆணை வழங்கப்பட்ட பிறகு, கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.