போரூர் பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை - கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி

சென்னைக்கு இன்று காலை 11:30 மணிக்கு விமானத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
Modi - Vijay
Published on: 
Summary

சென்னைக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி, பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை செல்லும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.

சென்னைக்கு இன்று காலை 11:30 மணிக்கு விமானத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். இதையடுத்து விமான நிலையத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பிரதமர் மோடியை வரவேற்றார்.

இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் இருவரும் போரூர் பைபாஸ் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

அப்போது சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமான பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் ரூபாய் 13,000 கோடி மதிப்பிலான ன் நெடுஞ்சாலை, ரெயில்வே, துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறைகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையில், சுமார் ரூபாய் 3,700 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.

அதைத்தொடர்ந்து ரூபாய் 750 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரெயில்வே திட்டங்களில், காரைக்கால் முதல் பேரளம் ரயில் பாதை, கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று ரெயில் மேம்பாலங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை துறைமுகம், வி.ஓ. சிதம்பரம் துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் ஆகியவற்றில் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் சரக்கு கையாளும் திறனை விரிவுபடுத்தும் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியத் துறையில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் குரூப் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மசகு எண்ணெய் அடிப்படை இருப்புத் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com