

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி - போரூர் இடையேயான புதிய சேவையைப் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் விஜயும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் விஜயும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் மெட்ரோ ரெயிலில் ஒன்றாகப் பயணித்துத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.
சென்னை நகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் முதல் சேவைத் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து போரூர் பைபாஸ் சாலை மெட்ரோ நிலையத்திற்கு வருகை தந்த பிரதமரும், முதலமைச்சரும் இணைந்து பூந்தமல்லி - வடபழனி இடையேயான முதல் மெட்ரோ சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்த புதிய வழித்தட திறப்பு விழாவைத் தொடர்ந்து, இருவரும் ஒரே மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி வரை இணைந்து பயணம் செய்தனர். இந்தப் பயணத்தின் போது, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் இருவரும் கேட்டறிந்து கலந்துரையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய-மாநில அரசின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த மெட்ரோ சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவது சென்னை வாசிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.