பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... ரெயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தெரியுமா?

தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.
Pongal festival - Train
Published on: 
Summary

அடுத்தாண்டு ஜனவரி பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 14-ந்தேதி தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகை

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். அந்த வகையில், நடப்பு தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். வழக்கமாக சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரெயில்களையே பெரிதும் விரும்புகிறார்கள்.

சொந்த ஊர் பயணம்

நீண்ட தூர பயணங்களுக்கு ரெயில்களே முதல் தேர்வாக உள்ளது. ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. அதன்படி, பொங்கல் பண்டிகை அடுத்தாண்டு ஜனவரி 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 14-ந்தேதி போகி பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகைக்காக பெரும்பாலானோர் போகிக்கு முந்தைய தினம் இரவு புறப்பட்டு போகி அன்று காலை தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவார்கள்.

முன்பதிவு தொடக்கம்

அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 14-ந்தேதி தொடங்குகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாவார்கள். எனவே, பொங்கலுக்கு முந்தைய தினம் ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் வரும் 14-ந்தேதியும். ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்ய விரும்புவோர் வரும் 15-ந் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 15-ந்தேதி பொங்கல் அன்று பயணம் செய்ய விரும்புவோர் வரும் 16-ந் தேதியும் முன்பதிவு செய்யலாம். வழக்கமான ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்த பிறகு பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X