வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு உதவ 5 இடங்களில் போலீஸ் உதவி மையங்கள்

போலீசார் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு உதவ 5 இடங்களில் போலீஸ் உதவி மையங்கள்
Published on: 
Summary

பொதுமக்களின் அவசர மருத்துவ உதவிக்காக மாதவரம் பஸ் நிறுத்தம் அருகிலும் கோயம்பேடு தேர்தல் ஆணையம் முன்பும் போரூர் சுங்கச்சாவடியில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வெளியூர் செல்லும் பொதுமக்களின் உதவிக்காக மாதவரம் பஸ் நிலையம், கோயம்பேடு தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பு, கோயம்பேடு பஸ் நிலைய நுழைவு வாயில், கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்தம், போரூர் சுங்கசாவடி ஆகிய 5 இடங்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

போலீசார்

அங்கு போலீசார் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு போலீஸ் துணை கமிஷனர், 4 உதவி ஆணையர்கள், 9 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், 39 சப்-இன்ஸ்பெக்டர்கள், 86 காவலர்கள் மற்றும் ஆயுதப் படை போலீசார், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ உதவி

பொதுமக்களின் அவசர மருத்துவ உதவிக்காக மாதவரம் பஸ் நிறுத்தம் அருகிலும் கோயம்பேடு தேர்தல் ஆணையம் முன்பும் போரூர் சுங்கச்சாவடியில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பூந்தமல்லியில் இருந்து வரும் வணிக மற்றும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படாமல் ஆலப்பாக்கம் சந்திப்பில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது.

கோயம்பேடு

மாதவரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக வாகனங்கள் சென்னை எல்லை மற்றும் மதுரவாயல் நோக்கி அனுமதிக்கப்படாது. அவை செங்குன்றம் வழியாக 200 அடி புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்புக்காக 10 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 20 இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அதிக வாகனங்கள் வரும் என்பதை கருத்தில் கொண்டு அங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com