டார்கெட் வைத்து ரூ.400 கோடி வசூல் என தகவல்... அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீசார்

அன்பில் மகேஷ் வழக்கு தொடர்பான பணப்பரிமாற்ற ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் சென்னை காவல்துறை கொடுத்துள்ளது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Published on: 
Summary

தேர்தல் நெருங்கும் நேரத்தில் டார்க்கெட் வைத்து தமிழகத்தில் 5000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான நேற்றைய விசாரணையில் பரபரப்பான வாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

வங்கி கணக்கு ஆய்வு

இந்த நிலையில், அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் டார்க்கெட் வைத்து தமிழகத்தில் 5000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அன்பில் மகேஷ் வழக்கு தொடர்பான பணப்பரிமாற்ற ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் சென்னை காவல்துறை கொடுத்துள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே கைதான அரசக்குமாரின் வங்கி கணக்கிற்கு சில பள்ளிகள் பணம் செலுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கலைவாணர் அரங்கத்தில் அன்பில் மகேஷ் முன்பு பேசிய வீடியோ, போலீசார் வசம் சிக்கியதை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

X