சென்னை சோழிங்கநல்லூர்- கோவளம் இடையே இணைப்பு சாலை அமைக்க திட்டம்: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியது

நில அளவை, போக்குவரத்து ஆய்வு, சோழிங்கநல்லூர், கோவளம் பகுதிகளில் மண் பரிசோதனை, நீர் மட்ட நிலவரம், நிலம் கையகப்படுத்தும் திட்டம், மதிப்பீடு தயாரிப்பது முதற்கட்ட பணியாகும்.
சென்னை சோழிங்கநல்லூர்- கோவளம் இடையே இணைப்பு சாலை அமைக்க  திட்டம்: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியது
Published on: 
Summary

சென்னையில் ஓ.எம்.ஆர் மற்றும் இ.சி.ஆர் இடையே புதிய இணைப்பு சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் முதல் கோவளம் வரைபடம் தயாராகி, டெண்டர் மூலம் டி.பி.ஆர் தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய சாலை பயண நேரத்தை 10 நிமிடமாக குறைத்து, போக்குவரத்து நெரிசலை தடுக்க உதவும்.

சென்னையின் முக்கிய இரு சாலைகளான ஓ.எம்.ஆர்.(ராஜீவ் காந்தி சாலை) மற்றும் இ.சி. ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) இடையே புதிய இணைப்பு சாலை அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது.

லிங்க் ரோடு

சோழிங்கநல்லூர் முதல் கோவளம் வரை இந்த புதிய லிங்க் ரோடு அமைய வரைபடம் தயாராகி உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.)தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை இப்போது டெண்டர் கோரியுள்ளது.

இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் 3 மாதத்தில் டி. பி. ஆர். தயாரிக்க வேண்டும்.

நில அளவை, போக்குவரத்து ஆய்வு, சோழிங்கநல்லூர், கோவளம் பகுதிகளில் மண் பரிசோதனை, நீர் மட்ட நிலவரம், நிலம் கையகப்படுத்தும் திட்டம், மதிப்பீடு தயாரிப்பது முதற்கட்ட பணியாகும்.

பயண நேரம் குறையும்

தற்போது ஓ.எம்.ஆர் -இ.சி.ஆர் செல்ல துரைப்பாக்கம் - நீலாங்கரை சாலை மட்டுமே உள்ளது. சோழிங்கநல்லூர், சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதியில் இருந்து கோவளம், மகாபலிபுரம் செல்ல 12 கி.மீ சுற்றி செல்ல வேண்டும்.

இந்த புதிய சாலை வந்தால் பயண நேரம் 10 நிமிடமாக குறையும். இதனால் சோழிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com