மின் வாரியத்தில் 8000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி

மின் வாரியத் தலைவரின் கடிதத்தைப் பரிசீலித்த தமிழக அரசு, 8,000 கள உதவியாளர் பணியிடங்களை TNPSC மூலமாக நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு செய்துள்ளது.
மின் வாரியத்தில் 8000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி
Published on: 
Summary

தமிழக அரசு, மின் வாரியத்தில் 8,000 கள உதவியாளர் பணியிடங்களை TNPSC மூலம் நேரடி நியமனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு கட்டமாக ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், 2027ஆம் ஆண்டில் 5,000 பேர், 2028ஆம் ஆண்டில் 3,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான அதிகாரி, மின் வாரியத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு அனுமதி வழங்கக் கோரியும் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.

மின் வாரியத் தலைவரின் கடிதத்தைப் பரிசீலித்த தமிழக அரசு, 8,000 கள உதவியாளர் பணியிடங்களை TNPSC மூலமாக நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு செய்துள்ளது.

TNPSC மூலம் நேரடி நியமனம் செய்து இரண்டு கட்டமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் கட்டமாக 2027ஆம் ஆண்டில் 5,000 பேர், 2ம் கட்டமாக 2028ஆம் ஆண்டில் 3,000 பேர் தேர்வு என தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com