பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தியவர் கைது

தனிப்படை போலீசார் பெரியபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கைது
கைது
Published on: 
Summary

குட்கா கடத்தலில் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. கைதான வீரமணியை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக ெசன்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க திருவள்ளுர் மாவட்ட போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் தனிப்படை போலீசார் பெரியபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த வரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அவ்போது அவர் 30 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

விசாரணை

விசாரணையில் அவர், சென்னை, ராயபுரம், சிதம்பரநாதன் தெருவை சேர்ந்த வீரமணி (வயது48) என்பது தெரிந்தது. இதையடுத்து வீரமணியை போலீசார் கைது செய்து குட்காவுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அவருடன் குட்கா கடத்தலில் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கைதான வீரமணியை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலை யில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்த னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com