கட்டுமரக் கதைகளால் இனி மக்களை ஏமாற்ற முடியாது..! - திமுக மீது தவெக கடும் தாக்கு

யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி கதறுகிறார்கள் கொத்து பரோட்டக்கள் என தவெக ஐடி விங் கிண்டல்.
DMK vs TVK
Published on
Summary

பொய் போராளியின் பிம்பம் உடைந்துவிட்டதே என பதறி திமுகவினர் போராட்டம் நடத்துவதாகவும், கத்தினாலும் கதறினாலும் இனி கட்டுமரக்கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம் என தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள்!

மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.

கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.

கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com