

தமிழ்நாட்டில் தலைமை செயலாளராக பணியாற்றிய சுகனேஷ்வர் உயிரிழந்துள்ள நிலையில், அவரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கடந்த 1967 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணி அலுவலராக சுகனேஸ்வர் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து உதவி ஆட்சியராகவும், மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்த அவர், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள முன்னாள் தலைமை செயலாளருக்கு தமிழக முதல்வர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.சுகவனேஸ்வர், இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.
சுகவனேஸ்வர் அவர்கள் 1967-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டு, திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கி, நீலகிரி மாவட்ட ஆட்சியர்,
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிருவாக முதன்மை ஆணையர், சிட்கோ தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்படப் பணியாற்றியவர் ஆவார்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.