

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா- நாயுடுபேட்டை இடையே நாளை (3-ந்தேதி) மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்டிரல்) இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.