

பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடனும் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 70). இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பரமேஸ்வரி (65). இவரும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நல பிரச்சினை காரணமாக பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றனர். ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது இவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவும் திறந்து கிடந்தது.
அதில் இருந்த பணம் மற்றும் சிறிய அளவிலான நகை திருடு போனது. பெரிய நகைகள் அனைத்தும் லாக்கரில் இருந்ததால் அவை தப்பின. இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணி புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவரது வீட்டின் வாசலில் ஏராளமான பீடித்துண்டுகள் கிடந்தன. இதனால் கொள்ளையில் ஈடுபட்டவர். மிகுந்த யோசனைக்கு பின்பு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து கடைசியாக கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளான்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு நகை, பணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளான் என தெரிய வந்தது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடனும் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.