

படப்பை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புவனா.பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 15-ந் தேதி பணி முடிந்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்தபோது சோமங்கலம் அடுத்த அசோக் பிருந்தா நகர் பகுதியில் மர்ம நபர் திடீரென புவனாவை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(27) என்பதும் கொளத்தூர் பகுதியில் தங்கி ஜே..சி.பி. ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த அவர் வேலை இல்லாததால் பேராசிரியை புவனாவை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.