

சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
4399 நாட்கள் நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராகத் தொடர்ந்து இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை.
ஆனால் அது ஜவாஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை.
1947 முதல் 1952 வரை நேரு அவர்கள் பிரதமராக இருந்தார் என்பதை மறக்க முடியுமா? நீக்க முடியுமா?.
பா.ஜ.க.வின் கணக்கு அவர்களுக்கு ஏற்பு என்பதைப் பற்றிக் கருத்துச் சொல்லவேண்டியதில்லை; ஆனால் ஊடகங்கள் பா.ஜ.க.வின் கூற்றை விளக்கமில்லாமல் வெளியிடுவதுதான் வியப்பளிக்கிறது.
பிரதமர் மோடியின் 12-ஆண்டுச் சாதனையைப் பாராட்டுவோம். அதே நேரத்தில் பாரத ரத்னா நேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்.
1947 முதல் 1952 வரை பிஞ்சுக் குழந்தைப் பருவத்தில் இருந்த ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவாஹர்லால் நேரு அவர்களைச் சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம் என்று கூறியுள்ளார்.