கூட்டுறவு வங்கிகளில் கிராமிற்கு ரூ.10,000 வரை நகைக்கடன் வழங்க உத்தரவு!

பிற வங்கிகளில் வழங்குவது போலவும் தங்க நகைகளின் சந்தை மதிப்புகளுக்கு ஏற்ப கிராமிற்கு வழங்கப்படும்.
Cooperative banks
Published on: 

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகையை அடமானம் வைத்தால், கிராமுக்கு தற்போது அதிகபட்சமாக, 7,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள போர் உள்பட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

இதனால், தேசிய மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த வங்கிகள், நிதி நிறுவனங்களில், கிராம் தங்கத்துக்கு அதிகபட்சம், 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

இதேபோல், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க கூட்டுறவு நிறுவனங்களிலும், கிராம் தங்கத்திற்கு அதிகபட்சம், 9,000 முதல், 10,000 ரூபாய் வரை கடனை உயர்த்த, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளதாக முன்பு தகவல் வெளியானது.

இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு கிராமிற்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் இதுவரை கிராமிற்கு ரூ.7000 வரை வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10,000 வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற வங்கிகளில் வழங்குவது போலவும் தங்க நகைகளின் சந்தை மதிப்புகளுக்கு ஏற்ப கிராமிற்கு வழங்கப்படும்.

ரூ.10 ஆயிரம் அல்லது நகை சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com