தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி

டெல்டா மாவட்ட பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
Edappadi Palanisamy
Kaveri Water Dispute: Karnataka releases only surplus water to Tamil Nadu despite full reservoirs
Published on

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், இறுதியில் உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்

அவர் பேசியதாவது, "மேகதாது விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.

அதுனுடன் காவேரி பிரச்சனை வருகின்ற போது, அதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதற்காக, டெல்டா மாவட்ட பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்டு, அதை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பிறகு அரசு அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இதுதான் கடந்த காலத்தில் இருந்து பின்பற்றப்படும் வரலாறாக உள்ளது".

உபரி நீர் மட்டுமே வருகிறது

"கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் போது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தால் தண்ணீர் பெற வேண்டிய நிலை இருக்கின்றது.

ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க மறுக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பதினைந்து நாட்களுக்கு தினந்தோறும் 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், தண்ணீர் திறக்கப்படவில்லை.

அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருப்பார்கள்.

இப்பொழுது கபினி அணை மற்றும் கர்நாடகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அனைகளும் நிரம்பிவிட்டன. அதனால் தற்போது உபரி நீர் மட்டும்தான் வந்து கொண்டு இருக்கிறது".

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com