பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்களுக்கு எந்த தேதியில் பணம் செலுத்தப்பட்டன: பரந்தாமன்

கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தக கொள்முதலில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
DMK Paranthaman
Published on: 
Summary

கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தக கொள்முதலில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் விளக்கமளித்துள்ளார்.

திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வந்ததை தொடர்ந்து, திமுக மீது ஒரு தவறான கண்ணோட்டத்தை தவெக உருவாக்கியுள்ளது.

புத்தக கொள்முதலில் தவறான புத்தகங்கள் வந்துள்ளதாக தகவல் கிடைத்தும், ஏன் அதனை திரும்ப பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவிடவில்லை.

இந்த புத்தகங்கள் அனைத்தும் யார் கொள்முதல் செய்தார்கள், எவ்வளவு கொள்முதல் செய்தார்கள் என்ற விவரத்தை ஏன் இன்னும் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் வெளியிடவில்லை.

இது தொடர்பான விவரங்களை தவெக தனது ஐடி விங் தளத்தில் வெளியிட்டு வருகிறது. ஒரு குற்றச்சாட்டு வருகிறது என்றால், முதலில் அரசு தரப்பில் இருந்துதான் விளக்கம் வரவேண்டும்.

இந்த கடிதங்கள் அனைத்தும் அரசின் கடிதங்களே கிடையாது, இது தவறாக சித்திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் வெளிப்படைத் தன்மையோடு புத்தகங்களை கொள்முதல் செய்வதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள புத்தகங்கள் எந்த தேதியில் வாங்கப்பட்டன, அதனை வாங்குவதற்கு யார் அனுமதி அளித்தது மற்றும் எந்த தேதியில் அரசாங்க கணக்கில் இருந்து பணப்பறிமாற்றம் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது ஜூன் மாதம் வாங்கப்பட்ட புத்தகங்களில் தான் பிரச்சனை வந்துள்ளது. திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில், இந்த விதமான பிரச்சனைகள் இல்லை.

அகல்விளக்கு புத்தக நிறுவனத்திற்கு எப்போது கொள்முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டது. எந்த தேதியில் இந்த புத்தகங்கள் எல்லாம் பெரியார் அறிவுலக நூலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவியுங்கள்.

திமுக ஆட்சியில் எந்தெந்த புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும் என்று போடப்பட்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

X