

சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை.
* மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை.
* திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.
* பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.
* வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.
* கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.
* தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும்.
* மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது.
* மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.
* அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார்.
* கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா?
* மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை.
* வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.
* திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது.
* அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.
* தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது.
* வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.
* மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது.
* திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.
* மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம்.
* நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
* முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பொறுப்பாக நிதி மேலாண்மை செய்தவர்.
* மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று அவர் கூறினார்.