படப்பையில் 4 மாதங்களில் உயிரிழந்த புது மணப்பெண் - கணவர் கைது!

இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
படப்பையில் 4 மாதங்களில் உயிரிழந்த புது மணப்பெண் - கணவர் கைது!
Published on: 

சென்னை தாம்பரம் அருகே, படப்பையில் திருமணமான4 மாதங்களேயான புதுமணப்பெண் ராஜேஸ்வரி (27) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தீபக் (27) மணிமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும், தாம்பரம் அடுத்த படப்பை அழகூர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு கணவர் தீபக், தனது மனைவி ராஜேஸ்வரியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி ராஜேஸ்வரியின் செல்போனை வாங்கி, யார் யாரிடம் எல்லாம் பேசியுள்ளார் என சோதனை செய்து, கடுமையான வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஸ்வரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.18) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மணிமங்கலம் போலீசார் தற்போது பெண்ணின் கணவர் தீபக்கை கைது செய்துள்ளனர். அவர்மீது தற்கொலைக்குத் தூண்டுதல், மனரீதியான கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வரதட்சணை கொடுமை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com