நீதிபதி பதவி நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கானது - நீதிபதி லிங்கேஸ்வரன்

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 13-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பதவி ஏற்பு
Published on: 
Summary

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 2 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்ற ஜனாதிபதி 13 நீதிபதிகளை நியமித்து கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிபதிகள் பதவி ஏற்பு

இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த மாவட்ட நீதிபதிகளான டி.லிங்கேஸ்வரன், பி.கார்த்திகேயன் ஆகிய இருவரையும் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த13-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து இந்த 2 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

67 ஆக உயர்வு

சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. அதில் 65 நீதிபதிகள் இருந்தனர். 10 இடங்கள் காலியாக இருந்தன. தற்போது, 2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. காலிப்பணியிடங்கள் 8 ஆக குறைந்துள்ளது.

புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு விழாவில், புதிய நீதிபதிகளை வரவேற்று பேசிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறியதாவது:-

புதிய நீதிபதிகள் இருவரும் ஐகோர்ட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவர் என நம்பிக்கை உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து, நீதி வழங்கப்படும். புதிய நீதிபதிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பு வழங்கப்படும்,

இவ்வாறு அவர் கூறினார்.

இவரைத் தொடர்ந்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கதிரவன், பல்வேறு வக்கீல் சங்கங்களின் தலைவர்களும் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர்.

இதற்கு நன்றித் தெரிவித்து ஏற்புரையாற்றிய நீதிபதி லிங்கேஸ்வரன், “நீதிபதி பதவி தனிநபருக்கானதல்ல. நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கானது” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com