ரூ.103.81 கோடி மதிப்பில் அரசு - அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு புதிய ‘பைகள்’ - டெண்டர் வெளியீடு

மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 91,771 மழைக்கோட்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
பள்ளி மாணவர்கள்
Published on: 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்த பிறகு 2027-28ம் கல்வியாண்டுக்கான 55 லட்சத்து 93 ஆயிரத்து 170 பள்ளிப் பைகளைக் கொள்முதல் செய்வதற்கான முதல் டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.103.81 கோடியாகும்.

ஷு, சாக்ஸ், மழைக்கோட்டு

பள்ளிப் பைகளுடன் சேர்த்து, 2027-28ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஷூ , சாக்ஸ், மழைக்கோட்டுகள், உள்ளிட்ட பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும் தமிழக அரசு ஏற்கனவே டெண்டர்களை வெளியிட்டு உள்ளது. இவற்றுக்கான கொள்முதல் பணிகளைத் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஷூக்களை வாங்க ரூ.37.24 கோடி மதிப்பிலும், சாக்ஸ்களை வாங்க ரூ.9.07 கோடி மதிப்பிலும் டெண்டர்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 91,771 மழைக்கோட்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

செர்ரி சிவப்பு நிறத்தில் 28, 30, 32, 34 இன்ச் அளவுகளில் இவை தயாரிக்கப்பட உள்ளன. கோவை, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X