நீட் விலக்கு: திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
நீட் விலக்கு: திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
Published on

சென்னை:

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 3-ந்தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் என்பது பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறை. நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.

நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com