நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது- அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

வாய்க்கு வந்தபடி பேசுவது நயினாரின் தரத்தை வெளிப்படுத்துகிறது.
Minister Raj mohan
Published on

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணவில்லை என முதலமைச்சர் பேசியது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்," பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேச வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேச வேண்டும். நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது.

திமுக- பாஜகவின் மறைமுக நட்பு வெளிப்படுகிறது. ஒரு கட்சியின் தலைவராக நயினார் பேசவில்லை.

அமைச்சர் வினோத்

நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாய்க்கு வந்தபடி பேசுவது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது.

அரசியல் களத்தில், கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லை. நயினார் முதல்வரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

டிஜிபி அலுவலகத்தில் புகார்

முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com