லஞ்சம் கொடுத்த அமைச்சர்-முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

லஞ்சம் கொடுத்த அமைச்சர்-முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Nainar nagendran
Published on
Summary

லஞ்சம் கொடுத்த அமைச்சர்-முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு, லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரியவில்சன், முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன?

குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நல னுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் அரசு எந்திரம் எப்படி நேர்மை யாக இயங்கும்?

எனவே, ஒப்பு தல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடை முறைகளைத் தவிர்ப்ப தற்காக லஞ்சம் வழங்கி யதற்காக பி.என்.எஸ்.-ன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறை யாக விசாரிக்க வேண்டும்.

விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சர வையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com