

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி யாக பூஜையுடன் தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக சாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள தாளம் முழங்க சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் திருவாடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதியில் உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ந்தேதி திருவிழா சூரசம்ஹாரம் இன்றுக்கிழமை) மாலை 4மணிக்கு கடற்கரையில் தொடங்கியது..
முன்னதாக காலை 6 ணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு பகல் 12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதர் எழுந்தருளி அங்கு தீபாராதனைக்குப்பின் பகல் 2 ணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் மாலை 4மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்சவின்போது வெற்றிவேல், வீரவேல் அரோஹரா என பக்தர்கள் முழக்கமிட்டனர்.
மாமரமாக மாறி நின்ற சூரபத்மடனை தனது கச்திவேலால் இரண்டாகப் பிளந்தார் முருகப்பெருமான்.
மயிலை தனது வாகனமாகவும், சேவலைத் தனது கொடியாகவும் முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார். திருச்செந்தூர் கடற்கறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளித்தனர்.
7-ம் திருவிழாவான 16-ந்தேதி அதிகாலை 5 ணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று இரவு 11மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் மேற்கொள்வதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பங்கேற்றனர்.