

தமிழகத்தில் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 விதிக்கப்பட்டுள்ளதால், நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.10 உயர்கிறது.
பீர், ஒயின், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுபானங்கள் என அனைத்து வகை மதுபானங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
இந்நிலையில் தமிழகத்தில் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* எம்ஆர்பி விலையில் சேர்க்கப்படும் ரூ.10 பாட்டிலை திருப்பி கொடுத்தால் நுகர்வோருக்கு திருப்பி வழங்கப்படும்.
* எம்ஆர்பி-ல் ரூ.10 சேர்ப்பதன் மூலமாக திருப்பி வராத பாட்டில்களுக்கு வசூலிக்கப்படும் தொகை அரசுக்கு சேரும்.
* 60% மதுபாட்டில்கள் மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. 40% பாட்டில்கள் திரும்ப வருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.