ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன்

ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றதால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது.
அமைச்சர் வெங்கட்ரமணன்
அமைச்சர் வெங்கட்ரமணன்
Published on
Summary

முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமனன் சட்டசபையில் பேசியதாவது,

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தபப்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றதால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், வெங்காயங்கள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் பிரதான விற்பனை பண்டகசாலைகள் உறுப்பினர் அவர்களுக்கு அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com