

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை இன்று காலை சமூக நீதிதுறை அமைச்சர் வன்னியஅரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் முழு நிவாரண தொகையான ரூ.6 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை அடுத்த ஓடை குளம் பகுதியில் கடந்த 23-ந்தேதி டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு பணியின்போது ஏற்பட்ட பிரச்சினையில் பேரூராட்சி கவுன்சிலர் கணவர் முருகன் வெட்டப்பட்டார். இதில் அவரது கை துண்டிக்கப்பட்டது. அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு 8 அறுவை சிகிச்சைக்கு பின் வெட்டப்பட்ட கை மீண்டும் இணைக்கப்பட்டது.
இந்தநிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை இன்று காலை சமூக நீதி துறை அமைச்சர் வன்னியஅரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் முழு நிவாரண தொகையான ரூ.6 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.
டெங்கு கொசு ஒழிப்பு பணியின்போது ஏற்பட்ட பிரச்சினையில் முருகன் வெட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 23-ந்தேதி நடந்துள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்களின் சிறப்பான முயற்சியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது கை இணைக்கப்பட்டுள்ளது. தற்போது முருகனின் கையில் உணர்ச்சிகள் திரும்ப தொடங்கியுள்ளன. அவர் முழுமையாக குணமடையும் வரை அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசே ஏற்கும். சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரணாக நிற்கவும் தமிழக அரசு எப்போதும் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர் சம்பத்குமார், கலெக்டர் பவன்குமார், அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.