

முதலமைச்சருக்கு அரோகரா என பாடியது குறித்து பாடகர் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் விஜய் புகழ்ச்சியை விரும்புவர் இல்லை என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதல்வருக்கு அரோகரா என முழக்கம் எழுப்பிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* சம்ஹார நிகழ்வை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
* முதலமைச்சருக்கு அரோகரா என பாடியது குறித்து பாடகர் விளக்கம் அளித்துள்ளார்.
* முதலமைச்சர் விஜய் புகழ்ச்சியை விரும்புவர் இல்லை.
* பாடகர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக பேசுவது ஏற்புடையதல்ல.
* பாடகர்களை தெருக்கூத்தாடிகள் என முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது ஏற்க முடியாது.
* கடந்த ஆட்சியில் பாடிய பாடகர்களை கூத்தாடிகள் என்ற மனநிலை திமுகவினருக்கு வரவில்லையா?
* எந்த விதியின் அடிப்படையில் திமுக கட்சி அலுவலகத்திற்காக ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தை திருடினார்கள்?
* கோவில் நிலங்களை திருடிய திமுகவினர் கோவில் விதிமுறைகளை பற்றி பேசி விமர்சிப்பதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.