

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சட்டமன்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் நலன் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய பின்னர், பதிலுரை அளித்தார். அப்போது அவர் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசினார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆன இந்த எளியவனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைத்த இரண்டாம் கருவறையாம் தளபதிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.
எல்லோரும் உயிலை எழுதி தருவார்கள். நான் அவருக்கு என் உயிரையே எழுதி தருகிறேன். விஜய்தான் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம்
Ever Rest இல்லாமல் உழைக்கும் Everest ஆக உயர்ந்து நிற்கிறார் முதல்வர்.
காலத்தை குறிப்பிட கி.மு., கி.பி. சொல்வார்கள். அரசியலில் இனி விஜய்க்கு முன், விஜய்க்கு பின் (வி.மு., வி.பி.,) என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழலும், லஞ்சமும் விஜயின் சாட்டை அடிக்கு பயந்து தலை தெறித்து ஓடிவிட்டது.
இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் பேசினார்.