6000 மின்மாற்றிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்

சீரமைப்பு செய்யப்படாத நிலையில் லோடு தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகின்றன.
Minister Nirmal Kumar
Published on
Summary

கடந்தாண்டு தேர்தல் காரணமாக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி செய்யாததால் அதிகளவில் பழுது ஏற்படுகிறது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பான புகார்களும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

அப்போது, மின்வாரிய செயல்பாடுகள், மின் உற்பத்தி, விநியோகம், மின் தேவையை பூர்த்தி செய்தவற்கான நடவடிக்கைகளை அவர் கேட்டறிந்தார். மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் மின்னகத்திலும் தொலைபேசி அழைப்புகளை கேட்டறிந்தார்.

* தமிழ்நாட்டில் 600 துணை மின் நிலையங்களை உருவாக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

* தட்டுப்பாடு நிலவும் நிலையில் மின்தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து ஆய்வு செய்தோம்.

* சீரமைப்பு செய்யப்படாத நிலையில் லோடு தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகின்றன.

* 20 ஆண்டுகள் பழமையான துணை மின்நிலைய மேம்பாடு குறித்த திட்டத்தை முதலமைச்சரிடம் அளித்துள்ளோம்.

* மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை.

* கடந்தாண்டு தேர்தல் காரணமாக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி செய்யாததால் அதிகளவில் பழுது ஏற்படுகிறது.

* மின்னகம், சமூக வலைதளம் என அனைத்து தரப்பிலும் வரும் மின் புகார்களை ஒருங்கிணைக்கும் பணியும் நடக்கிறது.

* ஏஐ தொழில்நுட்பம் மூலம் புகார்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணிக்கான ஒப்பந்தம் கோர உள்ளோம்.

* தமிழ்நாட்டில் தினமும் 19,000 மெகாவாட் மின்சாரம் தேவை. காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் மின்சாரம் வாங்குகிறோம். மின் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

* பேட்டரி ஸ்டோரேஜ் மூலம் மின்தேவையை சமாளிக்கும் சிறந்த திட்டத்தை நாம் அடுத்த மாதம் அறிவிக்க உள்ளோம்.

* பழைய மின் உபகரணங்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அடுத்த ஆண்டு வரையிலான மின் தேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

* 6000 மின்மாற்றிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மின்துறையின் காலி பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஒருசில வாரங்களில் அறிவிப்பு வெளியாகும்.

* அடுத்த 5 ஆண்டுகளுக்கான மின்தேவையை சமாளிப்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

* மின் ஊழியர்களுக்கு பணிகளை செய்து முடிப்பதற்கான நேரத்தை மக்கள் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com