பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் கீர்த்தனா

திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா
சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா
Published on
Summary

பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. தி.மு.க.- த.வெ.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளிக்கையில், விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.

அமைச்சர் கீர்த்தனா கூறுகையில்,

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்.

மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.

பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும். 1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு.

மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும். நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,

விமான நிலையம் அமைப்பது மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது. நிலம் கையகப்படுத்துவது மட்டும் தான் மாநில அரசின் பணி. மாநில அரசாங்கத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு மூன்று அமைச்சர்கள் நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை அழைத்து பேசினோம். 13 கிராமங்களில் 11 கிராமங்கள் ஒத்துக் கொண்டன. ஏகனாபுரம், பரந்தூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com